Monday, August 30, 2021

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்                 அக்னி நட்சத்திரம்

இயக்கம்                 மணிரத்னம்
தயாரிப்பு                 ஜி. வெங்கடேஸ்வரன்
கதை                         மணிரத்னம்
இசை                         இளையராஜா
நடிப்பு                         கார்த்திக்
                                     பிரபு
                                     விஜயகுமார்
                                     அமலா
                                     நிரோஷா
                                     ஜெயச்சித்ரா
                                     சுமித்ரா
                                    வி. கே. ராமசாமி
                                     ஜனகராஜ்
ஒளிப்பதிவு                 பி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்பு         பி. லெனின்
                                     வி. டி. விஜயன்
விநியோகம்          சுஜாதா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு                15 ஏப்ரல் 1988

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்

பெண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

ஆண் : நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

ஆண் : பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

பெண் : { காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண் : நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே

பெண் : நீ இன்றி ஏது
பூ வைத்த மானே

ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்

பெண் : வா வா
அன்பே அன்பே
ஆண் : காதல் நெஞ்சே
நெஞ்சே

பெண் : கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்

பெண் : அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்

ஆண் : { காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)

பெண் : உன் தோளில்
தானே பூமாலை நானே
ஆண் : சூடாமல் போனால்
வாடாதோ மானே
பெண் : இதயம் முழுதும்
எனது வசம்

ஆண் : வா வா
அன்பே அன்பே
பெண் : காதல்
நெஞ்சே நெஞ்சே

ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம்
பெண் : எல்லாமே
என் சொந்தம்
ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்

பெண் : வா வா
அன்பே அன்பே
ஆண் : காதல்
நெஞ்சே நெஞ்சே

 

 

Thursday, August 26, 2021

ORU NAYAGAN - THAVANI KANVUGAL

 

 





படம்                                  :  தாவணி கனவுகள்    

நடிகர்கள்                         : கே . பாக்கியராஜ்       
                                              ராதிகா
                                              சிவாஜி கணேசன்
                                                     
                         
 

டைரக்ஷன்                         : கே . பாக்கியராஜ்      

கதை                                   : கே . பாக்கியராஜ்

தயாரிப்பு                           : கே . பாக்கியராஜ்         

ரிலீஸ்                                  :  14. செப்டம்பர் .1984

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………………

பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன்தான்
வாசல் தேடி வந்ததொரு
வசந்த காலம்தான்
குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு
தகுதுகு தூ

பெண் மற்றும் குழு :
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பெண் குழு : பூ மாலை புகழ் மாலை
உனைத் தேடி வரும் வேளை
ஆண் : அன்பும் நல்ல பண்பும்
ரெண்டு கண் போல் காக்க வேண்டும்

பெண் குழு : வா ராஜா வாவென்று
வரவேற்பு தரும் வேளை
ஆண் : பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு
வாழ்த்தை ஏற்க வேண்டும்

பெண் : இளைஞன் நல்ல கலைஞன்
என்ற பேரை நீ வாங்கு
ஆண் : லலலலலலா லா
பெண் : நாளும் அந்த பேரால் இந்த
ஊரை நீ வாங்கு

ஆண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
பெண் : ஊரார்களின் இதயமாகிறான்

ஆண் : பள்ளியிலே பாடங்களை
படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென
நடக்கணும்

ஆண் : சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்

ஆண் மற்றும் குழு : இதை நீ
ஒத்துக்கணும் கத்துக்கணும்

ஆண் : அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா

ஆண் மற்றும் குழு : விளங்கும்
காலம் வரும் நேரம் வரும்

ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்று
தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழ வேணும்
உள்ளங்களை ஆள வேணும்

பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஆண் : ஊரார்களின் இதயமாகிறான்

குழு : ……………………………….

ஆண் : {மேலாடை ஹ மூடாமல்
ஹ பாவாடை போடாமல்
பொண்ணு ஒன்னு போனா
கண்ணு பாக்கும் அட்ரஸ் கேட்கும்} (2)

ஆண் : பூவும் வண்ண பொட்டு
கொண்டு கொடி போல் நடை போடு
குழு : லலல…..லாலாலா
ஆண் : நாணம் குல மானம்
தமிழ் பெண்ணின் பண்பாடு

பெண் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
ஆண் : நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன்தான்
வாசல் தேடி வந்ததொரு
வசந்த காலம்தான்
குழு : தகுதுகு தகுதுகு தகுதுகு
தகுதுகு தூ

அனைவரும் : ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

ROJA ONEDRU ULLANKAIEY POOTHATHU - O MAANE MAANE

 

 

 
படம்                                  :  ஓ மானே  மானே    

நடிகர்கள்                         : மோகன்      
                                              ஊர்வசி
                                                     


டைரக்ஷன்                         : ஏ . எல் . நாராயணன்       

கதை                                   : ஏ . எல் . நாராயணன்

தயாரிப்பு                           : பிலிம் கோ          

ரிலீஸ்                                  :  22. அக்டோபர் .1984

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு

பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

பெண் : உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்

ஆண் : உன் பெண்மைக்குள்ளே
நான் என்னைத் தேட
என் ஆண்மைக்குள்ளே
நீ உன்னைத் தேட
பெண் : ஆற்றில் நான் இன்று நீராட…..

பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ….

ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

ஆண் : என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா

பெண் : உன் கையில் என்னை
நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா
வேறென்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று
நான் கண்டேன்……..

ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ஆண் : வாசல் தாண்டி வந்து
பெண் : காதல் வேண்டி வந்து
ஆண் : ஆஹா நாணம் கொண்டு

பெண் : ம்ஹீம் ம்ம்ம்
ஆண் : ம்ஹீம்ம்
இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்

 

நிிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் - கைராசிக்காரன்

 

 

 படம்         :   கைராசிக்காரன்   

நடிகர்கள் : பிரபு     
                      ராதா
                      சில்க் ஸ்மிதா       
                         
 

டைரக்ஷன் : எஸ் எஸ் கே . சங்கர்      

தயாரிப்பு :  எஸ் கே எஸ்  பிலிம்ஸ்         

ரிலீஸ்         :  01.06.1984

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

பெண் : கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
ஆண் : சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பெண் : பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று
ஆண் : என் வாழ்விலே தீபம் ஏற்று

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

ஆண் : நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
பெண் : நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
ஆண் : உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
பெண் : நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
ஆண் : என் தெய்வமே நீ பெண்ணல்ல

பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
ஆண் : கனவொன்று கண்டேன் உன் கண்களில்
பெண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
ஆண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

 

கீதம்…சங்கீதம் நீதானே என் காதல் வேதம் - கொக்கரக்கோ

 

 படம்         :   கொக்கரக்கோ   

நடிகர்கள் : இளவரசி    
                      மகேஷ்       
                         
 

டைரக்ஷன் : கங்கை அமரன்     

தயாரிப்பு :  பாவலர் கிரேஷன்        

ரிலீஸ்         :  1983

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா……ஆஹா……ஹா….
ஆஹா…..ஆஹா ஹா…..கீதம்….

பெண் : கீதம்…..

ஆண் : சங்கீதம்….

பெண் : சங்கீதம்….

ஆண் : நீதானே என் காதல் வேதம்…….

பெண் : நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா…..

ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்……..

ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்

ஆண் : வாசமான முல்லையோ
வான வில்லின் பிள்ளையோ
ஓ பூவில் நெய்த சேலையோ
நடத்து வந்த சோலையோ
ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
ஆ……ஆஅ……ஆ…..ஆ…..

ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்……..

ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்

ஆண் : நீளமான கண்களே
நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே
பாவை பாதம் பார்க்கவே
கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
ஆ……ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்……..
பெண் : லா…..லா லா லா ……லா
லாலாலா லாலாலா லா…..லா….
லா…..லா லால லா….லா
லாலாலா லாலாலா லாலா லாலாலா

kathalin theepam onru - thambiku yentha oru


படம்         :   தம்பிக்கு  எந்த ஊரு   

நடிகர்கள் :  ரஜனிகாந்த்   
                         மாதவி      
                         சுலக்ஷனா    
 

டைரக்ஷன் : ராஜசேகர்    

தயாரிப்பு :  மீனா பஞ்சு அருணாச்சலம்        

ரிலீஸ்         : 01. ஏப்ரல் 1984


பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் :  ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா  ஆஹா ஆஹா 

ஹே ஹோ ஹ்ம்ம்
ஹ்ம்ம்

ஆண் :  காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில் 

 

ஆண் :  காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் : ஊடலில் வந்த
சொந்தம் கூடலில் கண்ட
இன்பம் மயக்கம் என்ன
காதல் வாழ்க

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் :  நேற்று போல்
இன்று இல்லை இன்று
போல் நாளை இல்லை
ஹான்

ஆண் :  நேற்று போல்
இன்று இல்லை இன்று
போல் நாளை இல்லை
ஹான்

 

ஆண் : அன்பிலே வாழும்
நெஞ்சில் ஆஆஆ…….
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே ஒன்றுதான்
எண்ணம் என்றால் உறவுதான்
ராகமே எண்ணம் யாவும்
சொல்ல வா

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் : என்னை நான்
தேடித் தேடி உன்னிடம்
கண்டு கொண்டேன் 


பொன்னிலே பூவை
அள்ளும் ஆஆஆ………
பொன்னிலே பூவை
அள்ளும் புன்னகை
மின்னுதே கண்ணிலே
காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

ஆண் : ஊடலில் வந்த
சொந்தம் கூடலில் கண்ட
இன்பம் மயக்கம் என்ன
காதல் வாழ்க

ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்

oru kunguma chengamalam - aarathani

 

 

 

 
படம்                               :   ஆராதனை   

நடிகர்கள்                     : சுமன்  
                                            சுமலதா     
                                            கௌண்டமணி    
 

டைரக்ஷன்                   : பிரசாத்   

தயாரிப்பு                     :  டிம்பில் கிரேஷன்       

ரிலீஸ்                             : 01. ஜனவரி 1981

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம் ம்ம்…..

ஆண் : ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்

பெண் : ஹா….ஆஅ….ஹா….ஆ….

ஆண் : திருவாய் மலர்வாய்
தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய்
நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
பெண் : ஆஅ…..
ஆண் : காயை புசிக்கும் கனியாவாய்
பெண் : ஆஆ…..

ஆண் : பூவைக்கு நாங்கள்
பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும்
பூ கொய்ய வேண்டும்

ஆண் : மின்னலிலே
பெண் : லா லலலா….
ஆண் : ஒரு கயிறு எடு
பெண் : லா லலலா….

ஆண் : மேகங்களால்
ஒரு தூளி இடு
கதிரோ தளிரோ
இள மகளது திருமுகம்

பெண் : லால்லா லால்லா
லா லல லால்லால் லால்லல லா
லல லால்லால் லால்லல லா…..

பெண் : ……………………..

ஆண் : முதுமை ஒரு நாள்
நம்மை வந்து தீண்டும்..
மூன்றாம் காலில்
நாம் நிற்க வேண்டும்..
முடியை பார்த்தால் முழு வெள்ளை
பெண் : ஆஆஅ…..
ஆண் : மடியில் தவழும் மகன் பிள்ளை
பெண் : ஆஆ…..

ஆண் : நீ ஏந்தி கொஞ்ச
நான் கொஞ்சம் கெஞ்ச
பெண் : ஹாஹஹா
ஆண் : பூ போன்ற பிஞ்சு
என் நெஞ்சில் துஞ்ச
பாய் அதனில்
பெண் : லா லலலா
ஆண் : நீ சாய்ந்திருக்க
பெண் : லா லலலா
ஆண் : பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க..
இருக்கும் வரைக்கும்
எனை தினசரி அனுசரி

ஆண் : குங்கும செங்கமலம்
பெண் : ஆஅ…..
ஆண் : இள மங்கையின் தங்க முகம்
பெண் : ஆஅ…..
ஆண் : பசி தூண்டும் அமுதம்
பெண் : ஆஅ…..
ஆண் : தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம் ம்ம்

ஆண் : ஒரு குங்கும செங்கமலம்
பெண் : ஆஅ…..
ஆண் : இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்..
பெண் : லாலாலாலா……

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்                 அக்னி நட்சத்திரம் இயக்கம்                 மணிரத்னம் தயாரிப்பு                 ஜி. வெங்கடேஸ்வரன் கதை               ...