Thursday, August 26, 2021

sangeetha megam - udhya geetham

 

 

 
படம்                    : உதய கீதம்

நடிகர்கள்          : மோகன்
                                 லட்சுமி     
                                 ரேவதி   
 

டைரக்ஷன்         : கே . ரங்கராஜ்  

திரைகதை         : கே . ரங்கராஜ்   

கதை                      :  ஆர் . செல்வராஜ்    

தயாரிப்பு             : மதர்லேண்ட் பிக்சர்ஸ்      

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும்
காலம் நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே நாளை
என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும்
காலம்

பெண் : ……………………….

ஆண் : { போகும் பாதை
தூரமே வாழும் காலம்
கொஞ்சமே ஜீவ சுகம்
பெற ராக நதியினில் நீ
நீந்தவா } (2)
{ இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன் } (2)
கேளாய் பூமனமே ஓஓ….

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும்
காலம்

ஆண் : { உள்ளம் என்னும்
ஊரிலே பாடல் என்னும்
தேரிலே நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே } (2)
{ எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே } (2)
கேளாய் பூமனமே ஓஓ…..

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும்
காலம் நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே நாளை
என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என்
வாழ்விலே ஓஓ….

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும்
காலம்

 

No comments:

Post a Comment

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்                 அக்னி நட்சத்திரம் இயக்கம்                 மணிரத்னம் தயாரிப்பு                 ஜி. வெங்கடேஸ்வரன் கதை               ...