படம் : தென்றலே என்னை தொடு
நடிகர்கள் : மோகன்
ஜெயஸ்ரீ
டைரக்ஷன் : சி .வி . ஸ்ரீதர்
திரைகதை : சி . வி . ஸ்ரீதர்
சித்ராலயா கோபு
கதை : சி . வி . ஸ்ரீதர்
தயாரிப்பு : தேவி பிளிம்ஸ்
ரிலீஸ் : 31. மே 1985
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹேய் ரப்பபபாப்பா
ஹேய் ஹேய் ரப்பபபாப்பா
ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ஆண் : உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ஆண் : நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன்
ஆண் : வான வெளியில் வளம் வரும் பறவை
நானும் அது போல் எனக்கென்ன கவலை
ஆண் : காற்று என் பக்கம் வீசும் போத காலம் என் பேரைப் பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது நேரம் இனிதாக யாவும் சுகமாக
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ஆண் : உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே
ஆண் : கோவில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம்
ஆண் : கூட எனது நிழலென வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
ஆண் : பாவை கண் கொண்ட பாசம் என்ன பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் நேரில் மலர நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ஆண் : உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே…..
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ஆண் : ரப்பபபாப்பா பாப்பா பாப்பா
பாப்பாபா
ரப்பபபாப்பா பா பா பா பா பாபா
பாபாபாபாபா…………..
No comments:
Post a Comment