படம் : தங்கமகன்
நடிகர்கள் : ரஜனிகாந்த்
பூர்ணிமா ஜெயராம்
ஜெய்சங்கர்
டைரக்ஷன் : ஏ . ஜெகநாதன்
திரைகதை : எஸ் . ஜெகதீசன்
கதை : சத்யா மூவிஸ் ஸ்டோரி டிபார்ட்மென்ட்
தயாரிப்பு : சத்யா மூவிஸ்
ரிலீஸ் : 4.நவம்பர் 1983
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூமாலை ஒரு பாவையானது
பொன் மாலை புது பாட்டு பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது
பூமாலை ஒரு பாவையானது
ஆண்கள் : போட்டிபாட்டுன்னு சொல்லி போஸ்டர் அடிச்சிட்டி
ஆள் எங்கப்பா கதையா இருக்குது
எங்கப்பா ஆள்
ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய்
ஹேய்ய்ய்ய்ஹேய்ய் லால்லலல
லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ….
ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா
பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா
இதை பார்க்க பார்க்க புதுமை
இதை கேட்க கேட்க கொடுமை
அட யார்தான் சொல்வது
பூமாலை ஒரு பாவையகுமா
பெண் : …………………….
பெண் : பாடும்போது பூங்காற்று
பாயும்போது நீரூற்று
என்னைப் போல பெண்ணில்லை
பெண்ணை வென்ற ஆணில்லை
ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே
சேவல் கூட போராட்டமா
கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்
பெட்டைக் கோழி தாங்காதம்மா
பெண் : தப்பான தாளங்கள் போடாதே
ஆண் : தகஜிகு தகஜிகு தகு
தகத் தாகதகத் தாக தக
பெண் : தப்பான தாளங்கள் போடாதே
உப்புக் கல் வைரக்கல் ஆகாதே
நானொரு நாட்டிய தேவதை பாரு
பெண் : பூமாலை ஒரு பாவையானது
பொன் மாலை புது பாடல் பாடுது
ஆண் : சாமி கூட ஆடத்தான்
சக்தி போட்டி போடத்தான்
அம்பாள் பாடு என்ன ஆச்சு
அம்பலதில் நின்னே போச்சு
பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம்
ஆண் : ஆஹா
பெண் : கடவுள் என்று பேராகுமா
ஆண் : ஓஹோ…
பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம்
ஆண் : ஒய்….
பெண் : குயிலின் கீதம் போலாகுமா
ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே
தகஜிகு தகஜிகு தகு
தகத் தாகு தகு தகு தகு
என்னோடு நீ வந்து மோதாதே
உன் பப்பு இங்கேதான் வேகாதே
ஆடலில் பாடலில் வல்லவன் பாரு
ஆண் : பூமாலை
ஒரு பாவையகுமா ஹான்
பொன் மாலை
ஒரு பாட்டு பாடுமா…..
பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை
இதை கேட்க கேட்க கொடுமை
இதை யார்தான் சொல்வது
பூமாலை ஒரு பாவையானது
No comments:
Post a Comment